Posts

கட்டமைப்பு பொறியாளர் (Structural Engineer) என்பவர் யார்?

  கட்டமைப்பு பொறியாளர் (Structural Engineer) என்பவர் யார்? ஒரு கட்டிடத்திற்கும், கட்டுமான திட்டத்திற்கும், கட்டிடக்கலை வல்லுநருக்கு அடுத்த மிக முக்கியமான பொறுப்பில் இருப்பவர் கட்டமைப்பு பொறியாளர். இவரின்றி கட்டிடக்கலையின் நவீன வளர்ச்சி இல்லை எனலாம். இவர் கட்டிடக்கலை வல்லுனருடன் இணைந்து அவரது வலது கரம்போன்று செயல்படுபவர். ஒரு கட்டிடத்தின் உருவாக்கம் முடிந்த பிறகு கட்டிடம் என்னென்ன பொருட்களை கொண்டு கட்டப்படப்  போகிறது என்பது முடிவெடுக்கப்படுகிறது. கட்டமைப்பு பொறியாளர்  கட்டிடம் கட்ட முடிவுசெய்யப்பட்டிருக்கும் மனையின் மண்ணின் தன்மைகளை ஆய்வு செய்து, மண்ணின் பாரம் சுமக்கும் தன்மை, கட்டிடத்தின் பாரம், ஆகியவற்றை கணக்கில் கொண்டு கட்டிடத்திற்கு எவ்விதமான அடித்தளம் அமைய வேண்டும் என்பதை தீர்மானித்து, பகுப்பாய்வு செய்து, கட்டமைப்பை வடிவமைப்பு செய்து, அதற்கான வரைபடங்களை உருவாக்கி தருகிறவர். மேலும், கட்டிடத்தின் பாரத்திற்கும் உயரத்திற்கும் ஏற்ப, கட்டிடக்கலை வல்லுனரின் விருப்பத்திற்கிணங்க, தூண்கள், உத்திரங்கள் மற்றும் தளங்களை தீர்மானித்து, பகுப்பாய்வு செய்து, கட்டமைப்பை வடிவமைத்து,...

கட்டிடக்கலை வல்லுநர் (Architect) என்பவர் யார்?

  கட்டிடக்கலை வல்லுநர் என்பவர் யார்? ஒரு கட்டிடத்தை வடிவமைக்க தேர்ச்சி பெற்றவரே கட்டிடக்கலை வல்லுநர் எனப்படுகிறார். இவர் இதற்கான படிப்பை படித்து, பட்டம் பெற்று, அனுபவ ரீதியாக தேர்ச்சி பெற்றவராக இருக்கிறார். இவர் தன் படிப்பில், வடிவமைப்புகளின் அடிப்படைகள், கட்டிடக்கலையின் விதிகள், வரைபடம் தயாரித்தல் , நிலஅளவை, கட்டுமான பொருட்களின் தன்மைகள், கட்டிடக்கலையின் வரலாறு, வடிவமைப்புகளின் கோட்பாடு, உட்புற வடிவமைப்பு, கட்டிட அளவெடுப்பு, சுற்று சூழல், உளவியல், காலநிலை, நிலைத்தன்மை, பசுமை கட்டிடங்கள், மாசுபடுதல், தோட்டக்கலை, கட்டுமான தொழில் நுட்பங்கள், தொழில் நடைமுறைகள், போன்றவற்றையும், கட்டிட கட்டமைப்பு, திட்ட மேலாண்மை, சுகாதாரம், நீர் மற்றும் வடிகால், மின்சாரம், குளிரூட்டுதல், இயந்திரவியல், தானியங்கிகள், ஒலிவியல், போன்ற பொறியியல்களின் அடிப்படைகளையும்   பாடங்களாக பெற்று தேர்ச்சி பெறுகிறார். மேலும் மாதிரி கட்டிட வடிவமைப்புகள் பலவற்றை பாடங்களாக கொண்டு அதற்கான தகவல்கள் திரட்டி, வடிவமைப்பு செய்து, தேவையான வரைபடங்கள் தயாரித்து பயிற்சி பெறுகிறார். இவற்றை தவிர கட்டிடக்கலை துறை சார்ந்த பல அரிய நூ...

கட்டிடக்கலை (Architecture) என்றால் என்ன?

  கட்டிடக்கலை என்றால் என்ன ?  ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்காக கட்ட திட்டமிடப்படும் கட்டிடத்தை, கட்டிட மனையின் தன்மைக்கு ஏற்ப, அந்த பயன்பாட்டிற்கு  தேவைப்படும் அறைகள், இடங்கள் மற்றும் வசதிகளை அறிந்து, அக்கட்டிடத்தைப் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடுகள் மற்றும் வசதிகள் செய்து, பயன்படுத்துவோர் எளிதாக பரிமாறிக்கொள்ளும் வகையில் திட்டமிட்டு, கட்டிடத்தின் உட்புற வெளிப்புற தோற்றங்களை எழிலுடனும்  காண்பவர் மனதை கவரும் விதமாக வடிவமைத்து, தட்பவெட்ப நிலைகளை மனதிற்கொண்டு, கட்டுமான பொருட்களின் தன்மையறிந்து உறுதியாக கட்டமைத்து, அதற்கேற்றாற் போல் வரைபடங்கள் தயாரித்து கட்டிடத்தை உருவாக்குவதே கட்டிடக்கலையாகும்.