கட்டமைப்பு பொறியாளர் (Structural Engineer) என்பவர் யார்?

 

கட்டமைப்பு பொறியாளர் (Structural Engineer) என்பவர் யார்? ஒரு கட்டிடத்திற்கும், கட்டுமான திட்டத்திற்கும், கட்டிடக்கலை வல்லுநருக்கு அடுத்த மிக முக்கியமான பொறுப்பில் இருப்பவர் கட்டமைப்பு பொறியாளர். இவரின்றி கட்டிடக்கலையின் நவீன வளர்ச்சி இல்லை எனலாம். இவர் கட்டிடக்கலை வல்லுனருடன் இணைந்து அவரது வலது கரம்போன்று செயல்படுபவர்.

ஒரு கட்டிடத்தின் உருவாக்கம் முடிந்த பிறகு கட்டிடம் என்னென்ன பொருட்களை கொண்டு கட்டப்படப்  போகிறது என்பது முடிவெடுக்கப்படுகிறது. கட்டமைப்பு பொறியாளர்  கட்டிடம் கட்ட முடிவுசெய்யப்பட்டிருக்கும் மனையின் மண்ணின் தன்மைகளை ஆய்வு செய்து, மண்ணின் பாரம் சுமக்கும் தன்மை, கட்டிடத்தின் பாரம், ஆகியவற்றை கணக்கில் கொண்டு கட்டிடத்திற்கு எவ்விதமான அடித்தளம் அமைய வேண்டும் என்பதை தீர்மானித்து, பகுப்பாய்வு செய்து, கட்டமைப்பை வடிவமைப்பு செய்து, அதற்கான வரைபடங்களை உருவாக்கி தருகிறவர். மேலும், கட்டிடத்தின் பாரத்திற்கும் உயரத்திற்கும் ஏற்ப, கட்டிடக்கலை வல்லுனரின் விருப்பத்திற்கிணங்க, தூண்கள், உத்திரங்கள் மற்றும் தளங்களை தீர்மானித்து, பகுப்பாய்வு செய்து, கட்டமைப்பை வடிவமைத்து, அவற்றிக்கான வரைபடங்களை உருவாக்கி தருகிறவர். மட்டுமல்லாமல் இவர் வானுயர் கட்டிடங்களில் ஏற்படும் காற்றழுத்தம், சூறாவளி, புயல், நிலநடுக்கம் வெள்ளப்பெருக்கு போனற்ற இயற்கை சீற்றங்களின் தாக்கங்களிலிருந்து கட்டிடத்தின் உறுதியை பகுப்பாய்ந்து, கட்டமைப்பை வடிவமைத்து தருபவர். கட்டுமான பொருட்களின் தரக் கட்டுப்பாடு, தர நிர்ணயம் மற்றும் கட்டுமானத்தின் தொழில் நடைமுறை விதிகள் ஆகியவற்றையும் கட்டுப்படுத்துபவர்.

கட்டமைப்பு பொறியாளர்கள் கட்டிடங்களின் கட்டமைப்பை மட்டுமல்லாமல் அணுவுலைகள், பெரிய அணைக்கட்டுகள், தொங்கு பாலங்கள், நீண்ட சுரங்கபாதைகள், வானுயர் கட்டுமானங்கள், மேல்நிலை நீர் தொட்டிகள், நிலத்தடி கட்டுமானங்கள், பாரிய தடுப்பு சுவர்கள், போன்றவற்றின் கட்டமைப்புகளையும் வடிவமைத்து தருகிறவர்கள்.

Comments

Popular posts from this blog

கட்டிடக்கலை வல்லுநர் (Architect) என்பவர் யார்?

கட்டிடக்கலை (Architecture) என்றால் என்ன?