கட்டமைப்பு பொறியாளர் (Structural Engineer) என்பவர் யார்?
கட்டமைப்பு பொறியாளர் (Structural Engineer) என்பவர் யார்? ஒரு கட்டிடத்திற்கும், கட்டுமான திட்டத்திற்கும், கட்டிடக்கலை வல்லுநருக்கு அடுத்த மிக முக்கியமான பொறுப்பில் இருப்பவர் கட்டமைப்பு பொறியாளர். இவரின்றி கட்டிடக்கலையின் நவீன வளர்ச்சி இல்லை எனலாம். இவர் கட்டிடக்கலை வல்லுனருடன் இணைந்து அவரது வலது கரம்போன்று செயல்படுபவர். ஒரு கட்டிடத்தின் உருவாக்கம் முடிந்த பிறகு கட்டிடம் என்னென்ன பொருட்களை கொண்டு கட்டப்படப் போகிறது என்பது முடிவெடுக்கப்படுகிறது. கட்டமைப்பு பொறியாளர் கட்டிடம் கட்ட முடிவுசெய்யப்பட்டிருக்கும் மனையின் மண்ணின் தன்மைகளை ஆய்வு செய்து, மண்ணின் பாரம் சுமக்கும் தன்மை, கட்டிடத்தின் பாரம், ஆகியவற்றை கணக்கில் கொண்டு கட்டிடத்திற்கு எவ்விதமான அடித்தளம் அமைய வேண்டும் என்பதை தீர்மானித்து, பகுப்பாய்வு செய்து, கட்டமைப்பை வடிவமைப்பு செய்து, அதற்கான வரைபடங்களை உருவாக்கி தருகிறவர். மேலும், கட்டிடத்தின் பாரத்திற்கும் உயரத்திற்கும் ஏற்ப, கட்டிடக்கலை வல்லுனரின் விருப்பத்திற்கிணங்க, தூண்கள், உத்திரங்கள் மற்றும் தளங்களை தீர்மானித்து, பகுப்பாய்வு செய்து, கட்டமைப்பை வடிவமைத்து, அவற்றிக்கான வ